பாபா பாஸ்கருடன் ரொமான்டிக் நடனமாடும் பருத்திவீரன் பிரியாமணி…! வைரல் வீடியோ..!!

நடன இயக்குனரான பாபா பாஸ்கருடன்  இணைந்து நடிகை பிரியாமணி ரொமான்டிக் பாடலிற்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார் விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை பிரியாமணி தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார், இதில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று வரும் பிரபல நடன இயக்குனரான பாபா பாஸ்கர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அப்போது நடிகை  பிரியாமணி பாபா பாஸ்கருடன் இணைந்து ரொமான்டிக் பாடலிற்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.