கொரொனோ எதிரொலி… குறைந்தது மக்கள் கூட்டம்… நேற்று காற்று வாங்கிய வணிக வளாகங்கள், சினிமா அரங்குகள்…

கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வரும் நிலையில் இந்நோய் பரவாமல் தடுக்க பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தனிகவனம் செலுத்தி ஈடுபட்டு  உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னை உள் பட தமிழ்நாடு  முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் தற்போது கூட்டம் குறைய தொடங்கி உள்ளது. எப்போதும் விடுமுறை தினமான  ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னையில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில்  கூடவில்லை. தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை தியாகராயர் நகர் ரெங்கநாதன் தெருவிலும் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. கொரோனோ எதிரொளியாக தமிழ்நாடு முழுவதும் இந்நிலையே நிலவுகிறது.

author avatar
Kaliraj