துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்தும் பேசும்பொருளாக மாறியுள்ளது.இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் உள்ள அதிமுக,திமுக ,திராவிடர் கழகம் ,விசிக ,மதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.ஆனால் பாஜக-வினர் மட்டும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் கருத்துக்களாக மட்டும் அல்லாமல் ரஜினிக்கு எதிராக ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு ரஜினி கூறுகையில்,கூறிய கருத்துக்கள் அனைத்தும் கற்பனையானவை அல்ல.நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ் சமுதாயத்திற்கு விடியலைப் பெற்று தந்து, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் ரஜினிகாந்த் கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.ரஜினிகாந்த் இத்தகைய அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்த்திருக்க வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் அவர்களே, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள்” என்று அன்போடு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…