ஜே.பி.நட்டாவுக்கு இருக்கும் அதிகாரத்தை விட மல்லிகார்ஜுனேவுக்கு அதிக அதிகாரம்.! கார்த்திக் சிதம்பரம் பதிலடி.!

ஜேபி.பட்டாவுக்கு கட்சியில் இருக்கும் அதிகாரத்தை விட 100 மடங்கு அதிக அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உண்டு. – காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம். 

அண்மையில் ஒரு நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பெயரளவுக்கு தான் தலைவராக இருக்கிறார். அவரை பின்னாடி இருந்து இயக்குவது வேறு ஆள். என சோனியா காந்தி, ராகுல் காந்தியை குறிப்பிட்டு பேசியிருந்தார் பிரதமர் மோடி.

ஜே.பி.நட்டா – கார்கே : இதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜகவில் தலைவராக இருக்கும் ஜேபி.பட்டாவுக்கு கட்சியில் இருக்கும் அதிகாரத்தை விட 100 மடங்கு அதிக அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. என கூறினார்.

50 ஆயிரம் வாக்கு வித்தியாசம் : அடுத்ததாக அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறங்கிய இ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என குறிப்பிட்டார்.

ஒற்றுமை யாத்திரை : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத ஒற்றுமை யாத்திரையினால் காங்கிரஸ் கட்சிக்கு பல பலன்கள் உண்டு. அடுத்து, கிழக்கு முதல் மேற்கு மாநிலங்களை மையப்படுத்தி வைத்து ஓர் பயணம் மேற்கொண்டால் அது கட்சிக்கு நல்ல பலனை தரும் என கூறினார்.

2024 தேர்தல் : அடுத்ததாக, 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. எனவும், ஆரம்பத்தில் இருந்தே பாஜக மேல்தட்டு வர்க்கத்திற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

Recent Posts

உங்க குழந்தைகளுக்கு பிடித்த பால் பணியாரம் செய்யலாமா?

பால் பணியாரம் -இந்தக் கோடை விடுமுறையை தித்திப்போட கழிக்க பால் பணியாரம் செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள்: பச்சரிசி =1 கப் உளுந்து =1…

15 mins ago

உங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் விஷ்ணுபதி புண்ணிய காலம்.. எப்போது தெரியுமா?

விஷ்ணுபதி புண்ணிய காலம்- விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் சிறப்புகளும் இந்த ஆண்டு வரும் தேதி பற்றி இப்பதிவில் காணலாம். விஷ்ணுபதி புண்ணிய காலம் என்றால் என்ன? ஏகாதசி…

2 hours ago

IPL2024: மீண்டும் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL2024:  மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

10 hours ago

JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் BS டிகிரி படிக்க இலவசம்.! என்ன தகுதி?

IITMadras : JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் -ல் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், அதற்கு ஐஐடி…

16 hours ago

5 நாட்களில் 54 ஆயிரம் வாகனங்களுக்கு இ-பாஸ்.! சுற்றுலா பயணிகளால் நிரம்பும் கொடைக்கானல்.!

Kodaikanal : இதுவரையில் கொடைக்கானல் செல்ல சுமார் 54 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியது என்றாலே தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல்…

16 hours ago

கூலி படத்தை இயக்க லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனை மிஞ்சிட்டாரே!

Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை…

16 hours ago