"மங்காத்தா" வெற்றிக்கு விருந்தளித்த தளபதி..!

நடிகர் விஜய் மங்காத்தா திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குனர் வெங்கட்

By bala | Published: Jul 08, 2020 05:02 PM

நடிகர் விஜய் மங்காத்தா திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் விஜயை பற்றி கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியது நான் விஜயுடன் சிவகாசி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன் அப்பொழுதே என்னிடம் விஜய் நன்றாக பேசுவார், நான் மங்காத்தா படத்தின் வெற்றியை முடித்துவிட்டு இருந்தேன் அப்பொழுது நடிகர் விஜய் என்னை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார், என்றும் கூறியுள்ளார், மேலும் விஜய் உடன் விரைவில் சிறந்த கதை கூறி அவருடன் இணைந்து ஒரு தரமான படம் பண்ணுவேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc