தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் 9 நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்..!

கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் பெருமை மிக்க கலைகளில் ஒன்று தான் யோகாசனம். இது நமது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. தொடர்ச்சியாக யோகாசனம் செய்யக் கூடிய அனைவருக்குமே நிச்சயம் தலை முதல் பாதம் வரை ஒரு நிம்மதியான உணர்வு கிடைக்கும்.

அந்த அளவிற்கு மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கிய நலன்களை யோகா வழங்குகிறது. மேலும் நாள் பட்ட வியாதிகளை கூட குணப்படுத்த கூடிய தன்மை இந்த யோகவிற்கு உண்டு. பல வித்தியாசமான முறைகளில் செய்யப்படக்கூடிய இந்த யோகா மன உளைச்சல்களை நீக்க கூடியது. இதனால் ஏற்படக்கூடிய 9 நன்மைகள் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வலிமை

யோகா செய்வதன் மூலமாக நமது இரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகள் சூடேறுவதால் நமது உடலுக்கு அதிகப்படியான ஆற்றலும், வலிமையும் கிடைக்கிறது. இதற்கு ஒற்றை காலில் அமர்ந்துகொண்டு மற்ற காலை முழங்காலுக்கு மேல் வைத்து அமர்ந்து கொண்டு ஒரே இடத்தை பார்க்கும் யோகா முறையை செய்து பார்க்க வேண்டும்.

முதுகு வலி

தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் முதுகுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. பல நாட்களாக முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் கூட தினமும் யோகா செய்தால் நிச்சயம் இதிலிருந்து நிவாரணம் பெறலாம்.

மூட்டு வலி

மூட்டு வலி மற்றும் கீல்வாத அறிகுறி உள்ளவர்களுக்கு யோகாசனம் செய்வது சிறந்த நிவாரணமாக இருக்கும். யோகா செய்வதால் மூட்டுவலி குணமாகும் என அண்மைய ஆய்வு ஒன்றில் கூட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய ஆரோக்கியம்

யோகா செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் வழக்கமாக தினமும் யோகா செய்து வருவதன் மூலமாக மன அழுத்தம் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும். மேலும் தொடர்ந்து யோகா செய்வதன் மூலமாக உயர் ரத்த அழுத்தம் குறைவதுடன், இதயம் ஆரோக்கியமாக இருக்கவும் இது உதவுகிறது.

உறக்கம்

யோகா செய்பவர்கள் தூக்கமின்மையால் அவதிப் பட வேண்டிய நிலை உருவாகாதாம். தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக குறிப்பிட்ட சில நிமிடங்கள் யோகா செய்தால் கூட நமது மனநிலை சீராக உதவுவதுடன், நல்ல உறக்கத்திற்கும் இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

ஆற்றல்

யோகா தொடர்ந்து செய்வதால் உடல் வலிமை அதிகரிக்கும். மேலும், நமது அன்றாட வேலைகளை செய்வதற்கு தேவையான ஆற்றல் நமக்கு இதன் மூலமாக கிடைக்கிறது.

மன அழுத்தம்

தொடர்ச்சியாக யோகாசனம் செய்வதன் மூலமாக மன அழுத்தம் நீங்க உதவுவதுடன் நினைவாற்றல் அதிகரிக்கவும் உதவுகிறது.

தனிமை

யோகா செய்பவர்கள் தனிமையான சூழலில் இருக்காமல், எப்பொழுதும் பிறருடன் இணைந்து சமூக விரும்பிகளாக இருப்பார்களாம். ஒற்றுமையான குடும்ப உறவை அதிகம் விரும்ப கூடியவர்களாகவும் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

சுய பராமரிப்பு

யோகா செய்பவர்கள் தங்கள் உடல்நலத்தில் அதிக அக்கறையுள்ளவர்களாக இருப்பார்களாம். மேலும், எப்பொழுதும் தூய்மையானவர்களாகவும் இருக்க இந்த யோகா வழிவகுமாம். இவ்வாறு யோகா செய்வது பல வழிகளில் நமது வாழ்வை திறம்பட கொண்டு செல்வதற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

Rebekal

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

4 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

5 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

7 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

8 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

8 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

8 hours ago