காஃபியில் இவ்ளோ நன்மைகளா..!

பொதுவாக நம்மில் பலருக்கு காலை எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது நம்மை நாள் முவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அதிகம் உதவுகிறது.

அதுமட்டுமின்றி பலர் அறிந்திடாத பல நன்மைகள் காஃபியில் உள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம்.

காஃபியின் நன்மைகள்: 

1. எனர்ஜி ட்ரிங்.! :

life style

  • காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது.
  • மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக அமைகிறது.
  • காஃபின் குறிப்பாக கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற கெமிக்கல்களின் சுழற்சியை உடலில் அதிகரிக்கிறது.

2. டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க:

life style

  • தினமும் 1 கப் காபி குடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 6 சதவீதம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • காஃபின் தவிர காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
  • இதிலிருக்கும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு நோய்களைத் தடுக்கும்.

3. பார்கின்சன் நோய் அபாயத்தை குறைக்க:

life style

  • பார்கின்சன் நோய் என்பது நரம்பியல் சிதைவுக் கோளாறு. பொதுவாக இது வயதான காலத்தில் ஏற்படும்.
  • தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு பார்கின்சன் நோயின் அபாயம் குறையும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஏற்கனவே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட தினசரி மிதமான அளவு காபி குடிப்பது அவர்களின் இயக்கங்களை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும்.

4. டிப்ரெஷனை குறைக்கிறது:

life style

  • காபி மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் போன்ற சிறந்த உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • எனவே தினசரி குறைந்தபட்சம் ஒரு கப் காபியை பருகுவது டிப்ரெஷன் ஏற்படும் வாய்ப்புகளை 8% வரை குறைக்கிறது.

5. பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்:

life style

  • காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தம், எல்டிஎல் கொழுப்பு மற்றும் பலவற்றைக் குறைப்பதன் மூலம் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

6. கல்லீரல் பாதுகாப்பு:

life style

  • நம் உடல் காஃபினை ஜீரணிக்கும்போது, ​​அது பராக்சாந்தைன் என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது, இது ஃபைப்ரோஸிஸில் உள்ள வடு திசுக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.
  • மேலும் இது கல்லீரல் புற்றுநோய், ஆல்கஹால் தொடர்பான சிரோசிஸ், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஹெபடைடிஸ் சி உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராட உதவும்.
  • மொத்தத்தில் தினசரி மிதமான காபி நுகர்வு கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

7. இதய நோய் அபாயங்களை குறையும்:

life style

  • நாளொன்றுக்கு 2 – 3 கப் காபி குடிப்பது சிறந்த ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • இப்பழக்கம் இதய நோய் உட்பட இறக்கும் அபாயத்தை 10-15% குறைத்து உங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
  • நினைவில் இருக்கட்டும், மேற்சொன்னபடி அதிகபட்சம் 3 கப் வரை மட்டுமே தினமும் குடிக்கலாம்.
author avatar
Varathalakshmi

Leave a Comment