அடுத்தடுத்து விக்கெட் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கிய சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் ..!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து, 4 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகமானார். இந்நிலையில், இன்றைய முதல் போட்டியில் 64 ஓவரை வீசிய நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலி வீரர் மேத்யூ வேட் 45 ரன் எடுத்து விளையாடியபோது அவரது விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டியின்  தனது விக்கெட் கணக்கை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் 66 ஓவரை வீசிய நடராஜன் சதம் விளாசி அதிரடியாக  விளையாடி வந்த லபுசானே விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால், நடராஜன் இதுவரை 14 ஓவர் வீசிய 2 விக்கெட்டை வீழ்த்தி 33 ரன்கள் கொடுத்துள்ளார். வலைப்பயிற்சியில் பந்து வீசி சென்று ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்றுவித கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?

C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…

17 mins ago

உங்கள் நகத்தை வைத்து உங்கள் அகத்தின் ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கோங்க.!

Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…

46 mins ago

போஸ்டரில் கூட வர மாட்டேன்னு சொன்னாங்க! பிரேமம் குறித்து உண்மையை உடைத்த மடோனா!

Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…

50 mins ago

கிரிக்கெட்ல இத்தனை வகை டக்-அவுட் இருக்கா ? தெரிஞ்சுக்கோங்க !!

Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…

52 mins ago

7 மாத ஆண் குழந்தை… உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனை நிறைவு.!

Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…

1 hour ago

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

2 hours ago