கொடூரன் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 80 பேர் பலி… உறைய வைக்கும் தகவல்கள்..

  • கொரோன வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை உயர்வு.
  • அச்சத்தில் ஆழ்ந்த அகில உலகமும்.

நம் அண்டை நாடான சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் 440 பேருக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும். இந்நிலையில், பலி  எண்ணிக்கை நேற்று மேலும் அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள்  கடுமையான சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.

Image result for korona virus

இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,744 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வுஹான் நகருக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பஸ், ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்துக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது,,  80ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,744 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரத்தில் உலகமே அச்சத்தில் உள்ளது.

author avatar
Kaliraj