விஜயகாந்த் இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் அவரது உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி சடங்கில் ஆளுநர், முதல்வர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து, அவரது உடலுக்கு 72 துப்பாகி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தேமுதிக அலுவலகம் காவல்துறையின் 3 அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்ள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை – போலீஸ் அறிவிப்பு.!

ஆனால், கேப்டன் விஜய்காந்தின் இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய LED திரை அமைக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.