,
onion rasam

செட்டிநாடு ஸ்பெஷல்..! மணக்க மணக்க வெங்காய ரசம் செய்யலாமா?

By

Rasam recipe-செட்டிநாடு ஸ்பெஷல் வெங்காய ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்;

  • சின்ன வெங்காயம் =10
  • சீரகம்= ஒன்றை  டீஸ்பூன்
  • மிளகு= ஒரு டீஸ்பூன்
  • பச்சை மிளகாய்= ஒன்று
  • வரமிளகாய்= இரண்டு
  • தக்காளி= மூன்று
  • புளி = எலுமிச்சை அளவு
  • பருப்பு தண்ணீர் =இரண்டு  கப்
  • எண்ணெய் = இரண்டு ஸ்பூன்
  • கடுகு உளுந்தம் பருப்பு= ஒரு ஸ்பூன்
  • வெள்ளம்= கால் ஸ்பூன்
  • பெருங்காயம்= கால் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன்
  • தேவையான அளவு கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள்.

small onion (1)

செய்முறை;

முதலில் சீரகம் ,மிளகு ஆகியவற்றை கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும். இப்போது அதை தனியாக எடுத்து வைத்து விட்டு பச்சை மிளகாய் ஒன்று மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு இவற்றையும் இடித்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் ஒன்று இரண்டாக இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

tomato (1)

இப்போது தக்காளியை கைகளால் பிசைந்து வைத்துக் கொள்ளவும் .அதனுடன் புளி கரைசலையும் சேர்த்து கொள்ளவும். இப்போது சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விடவும். இப்போது பருப்பு தண்ணீரை இரண்டு கப் சேர்த்துக் கொள்ளவும்.மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை ,வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

masala items

பின்  மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தாளிப்பை கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி, கருவேப்பிலை இலைகளையும் சேர்த்து நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து வெல்லம் சேர்த்து  இறக்கவும். இப்போது கம கம வென செட்டிநாடு ஸ்பெஷல் வெங்காய ரசம் ரெடி.

 

Dinasuvadu Media @2023