ரூ.15 கோடி செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக பெற்ற 21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தி இருந்தது. கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடவும் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கோரி சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு.

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக நடிகர் விஷால் 15 கோடி நிரந்தர வைப்பு ஈடாக செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரமே வாகை சூடவா படம் வெளியாகிவிட்டதால் படத்தை தடை செய்தால் எந்த பலனும் இல்லை என்பதால்அதற்குப் பிறகு படம் ஈட்டிய வருமானத்தில் 15 கோடி ரூபாயை இந்த வழக்கின் கணக்கில் 3 வாரத்திற்குள் நடிகர் விஷால் டேபாசிட் செய்ய உத்தரவிடபட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.