திடீரென ரயிலில் ஏறிய சந்திரமுகி…பதறிப்போன பயணிகள்…விளக்கம் கொடுத்த நிறுவனம்.!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில்  “டெல்லி மெட்ரோ ரயிலிளுக்குள் பயணிகள் அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு பெண் ஒருவர் மஞ்சள் நிற புடவை அணிந்து கொண்டு சந்திரமுகி போல வேடம் அணிந்துகொண்டு அங்கிருந்த பயணிகளை பயமுறுத்தினார்.

Chandramukhi metro train 2
Chandramukhi metro train 2 Image Source Twitter

இதனால் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சற்று பயந்தனர். பிறகு , சந்திரமுகி வேடமிட்டிருந்த அந்த பெண் இளைஞர் ஒருவரை மிரட்டி எழுப்பி அவருடைய இடத்தில அமர்ந்தார். பிறகு ரயிலின் கதவுகள் மீண்டும் திறந்தது அதிலிருந்து நெட்ஃபிக்ஸ் தொடரான ‘மணி ஹீஸ்ட்’ மற்றும் கே-டிராமா ‘ஸ்க்விட் கேம்’ ஆகியவற்றின் கதாபாத்திரங்களாக உடையணிந்த இரண்டு ஆண்கள் உள்ளே நுழைந்தனர்.

Metro Incident
Metro Incident Image Source Twitter

இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் எதற்காக இப்படி செய்துள்ளார்கள் என குழம்பி வந்தனர். இதனையடுத்து, நொய்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (என்எம்ஆர்சி) இந்த வீடியோக்கள் மெட்ரோ வளாகத்தில் தனது அனுமதியுடன் படமாக்கப்பட்ட வணிக விளம்பரத்தின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தியது.

 

View this post on Instagram

 

A post shared by boAt (@boat.nirvana)

டெல்லியை தளமாகக் கொண்ட எலக்ட்ரானிக் கேஜெட் பிராண்டான (BoAt)  நிர்வாணா நிறுவனம் தங்களுடைய (headphones) ஹெட்ஃபோன்கள் விளம்பரம் செய்வதற்காக Netflix ஆகியவற்றின் ஒத்துழைப்பைக் கொண்டு இந்த வீடியோவை உருவாக்கியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களுக்கு வீடியோவை பார்க்கையிலே இது ப்ரோமோஷன் என்பது தெரிந்துவிட்டது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment