ஷூட்டிங்-ல எம்.ஜி.ஆரை பற்றி கேவலமாக பேசிய சந்திரபாபு! பிரபலம் சொன்ன சீக்ரெட்!

M.G.Ramachandran : படப்பிடிப்பு தளத்தில் அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சந்திரபாபு திட்டி பேசியதால் படமே பாதியில் நின்றுள்ளது.

எம்.ஜி.ஆர் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சந்திரபாபு. எம்.ஜி.ஆருடன் இவர் இணைந்து நடித்து இருந்த படங்களின் காமெடியான காட்சிகள் எந்த அளவிற்கு சிரிக்க வைக்கும் படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அந்த சமயம் எம்.ஜி.ஆரை சந்திரபாபுவுக்கு பிடிக்காதாம்.

ஒரு முறை சந்திரபாபு எம்.ஜி.ஆரை கடுமையாகவே திட்டி அசிங்கப்படுத்தவும் செய்தாராம். அந்த சமயம் சந்திரபாபு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த நிலையில், சகோதிரி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவருடைய மார்க்கெட் உயர தனது குணத்தையே மாற்றிவிட்டாராம். அந்த படத்தில் இருந்து தான் பெரிய இடத்தில் இருப்பதாகவும் நினைத்துக்கொண்டாராம்.

அந்த சமயம் தான் எம்.ஜி.ஆரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தையும் இயக்கி சந்திரபாபு தயாரிக்கவும் செய்தாராம். அப்போது ஒரு முறை அங்கு இருந்த எம்.ஜி.ஆரின் நெருக்கமானவர்களிடம் நான் இப்போது இயக்குனர் ஆகிவிட்டேன் உங்களுடைய எம்.ஜி.ஆர் எப்போது படப்பிடிப்புக்கு வருவார் என்று கேட்டாராம். அதற்கு அங்கு இருந்த எம்.ஜி.ஆரின் நெருக்கமான ஒருவர் எம்.ஜி.ஆர் கொடுத்த கால்ஷீட்டுக்கு சரியாக வந்துவிடுவார் தேவை இல்லாமல் அவரை பற்றி பேசாதீர்கள் என்று கூறினார்களாம்.

அதற்கு சந்திரபாபு நான் இப்போது முதலாளி என்னிடம் அவர் சம்பளம் வாங்கும் வேலைக்காரன் என்று கூறிவிட்டாராம். இதனை அங்கு இருந்தவர்கள் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டார்களாம். பிறகு எம்.ஜி.ஆர் நேரடியாகவந்து உன்னுடைய படத்திற்கு 2 மணி முதல் 6 மணி வரை தான் கால்ஷீட் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டு அதைப்போலவே 6 மணி ஆனதும் கிளம்பிவிட்டாராம். கிளம்பும் போது இன்னொரு காட்சி இருக்கிறது எடுக்கவேண்டும் என்று சந்திரபாபு கூறினாராம்.

அதற்கு கடுப்பான எம்.ஜி.ஆர் நான் உனக்கு கொடுத்த கால்ஷீட் இவ்வளவு தான் மீதம் உள்ள காட்சியை அடுத்த கால்ஷீட்டில் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம். இதனால் எம்.ஜி.ஆர் போன பிறகு அவரை பற்றி சந்திரபாபு  கடுமையாக தாக்கி பேசினாராம். குடித்திருந்தால் மிகவும் கேவலமாகவும் பேசுவாராம். இதுவும் எம்.ஜி.ஆருக்கு தெரியவர சரியான கால்ஷீட் கொடுத்து அந்த படத்தை முடித்துக்கொடுக்க முடியவில்லையாம். ஏனென்றால், அந்த சமயம் வேறு சில படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்க கமிட் ஆகி இருந்தாராம்.

இதன் காரணமாக சந்திரபாபு படத்திற்கு எம்.ஜி.ஆரால் சரியாக கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம். இதனாலே எம்.ஜி.ஆர் மற்றும் சந்திரபாபுக்கு இடையே பிரச்சனைகளும் ஏற்பட்டு அந்த படம் நின்று போனதாம். எம்.ஜி.ஆர் உன்னுடைய படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாது என்று சந்திரபாபுவிடம் கூறவே இல்லயாம். தன்னுடைய படங்களை எல்லாம் முடித்த பிறகு கால்ஷீட் தருகிறேன் என்று தான் கூறினாராம். ஆனால், அதனை புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆரை அந்த சமயம் சந்திரபாபு கடுமையாக திட்டியும் பேசினாராம். இந்த தகவலை எம்ஜிஆருடன் பணியாற்றிய ஆடை வடிவைமைப்பாளர் முத்து என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.