புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் என எச்சரிக்கை கொடுத்துள்ளது.

பிப்பர்ஜாய் புயல் நிலவரம் 

நேற்று (09.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிப்பர்ஜாய்” வடக்கு திசையில் நகர்ந்து போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு, அடுத்த மூன்று தினங்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.