இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

வானிலை : தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து குளிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில்,  நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்தது.

அதனை தொடர்ந்து இன்று தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.

வெப்பநிலை

வெப்ப நிலையை பொறுத்தவரையில், வரும் ஏப்ரல்6-ம் தேதிவரை வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கும். அதைப்போல, உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.