தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு. மேலும் சென்னை புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சூறைக்காற்று வீசுவதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.