நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. பில்லூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு.!

நீலகிரியில் கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் மலைச்சரிவு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி,தேனி,கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அப்பர் (மேல்) பவானியில் 31 செ.மீ., அவலாஞ்சியில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி கூடலூரில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மேலும் பில்லூர் அணை நிரம்பியது. மெங்கும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.