சாத் பூஜை 2020 : நான்காவது நாளாக கொண்டாடப்பட்ட சப்தமி தினம்.!சாத் பூஜை 2020 : நான்காவது நாளாக கொண்டாடப்பட்ட சப்தமி தினம்.!

சாத் பூஜையின் நான்காவது மற்றும் கடைசி நாளான இன்றைய சப்ததி தினத்தில் பக்தர்கள் சூரிய உதய நேரமான காலை 6:48 மணிக்கு முன் சூரிய கடவுளை வழிபாடு செய்து,பின் உணவை உண்டு நோன்பை முடிப்பார்கள்.

நாடு முழுவதும் சாத் பூஜையை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவார்கள் .நான்கு நாள் நடைபெறும் இந்த சாத் பூஜை திருவிழாவை குறிப்பாக பீகார் , ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுதோறும் கொண்டாடுவார்கள்.சூரிய கடவுளுக்காக செய்யப்படும் இந்த பூஜையில் அவரது துணைவியார் உஷா மற்றும் பிரதுஷா ஆகியோருக்கு நோன்பு இருந்து பிரார்த்தனை செய்வது வழக்கம்.காரத்திகை மாதத்தில் அனுசரிக்கப்படும் இந்த பூஜை , நடப்பாண்டில் நவம்பர் 18 முதல் 21 ஆம் தேதி வரை கொண்டாடுகின்றனர்.

இந்த பூஜைக்கு சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதய நேரங்கள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த பூஜையின் போது பக்தர்கள் காலை மட்டும் உணவு உண்டு நோன்பு இருப்பார்கள் . இந்த திருவிழாவின் முக்கிய நாள் என்பது மூன்றாவது நாளாகும்.

அந்த வகையில் நேற்றைய தினம் மூன்றாவது நாளை பக்தர்கள் கடைபிடித்தனர் .அந்த சாத் பூஜை நாளில் சூரிய உதயமானது காலை 06:48, சூரிய அஸ்தமனமானது மாலை 05:26 ஆகும் .அன்று சூரிய அஸ்தமன நேரத்தில் சூரிய கடவுளுக்கு பிரார்த்தனை செய்வார்கள்.

அதனையடுத்து நான்காவது மற்றும் கடைசி நாளான இன்று பக்தர்கள் சூரிய உதயத்திற்கு முன் சூரிய கடவுளை வழிபாடு செய்து,பின் உணவை உண்டு நோன்பை முடிப்பார்கள்.சப்தபி நாளான இன்றைய தினத்தின் சூரிய உதயம் காலை 6:48 மணியும் ,சூரிய அஸ்தமன நேரம் மாலை 5:24 மணியாகும் .கொரோனா அச்சம் காரணமாக இந்தாண்டு பக்தர்கள் சமூக விலகல் கடைப்பிடித்து ,முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது.