2,274 கோடி அபராதம் செலுத்தாதது தொடர்பாக கூகுளுக்கு CCI நோட்டீஸ்.!

ரூ.2,274 கோடி அபராதம் செலுத்தத் தவறியதற்காக, கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சாதன சந்தைகளில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நியாயமற்ற வணிகத்தில் செயல்பட்டதாகவும், போட்டி சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டி அந்நிறுவனத்திற்கு கார்பரேட் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய போட்டி ஆணையம் அபராதம் விதித்தது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மொத்தம் ரூ.2,274 கோடி அபராதம் செலுத்தத் தவறியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) கோரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சிசிஐ-இன் அபராதங்களுக்கு எதிராக கூகுள் நிறுவனத்தின் மேல்முறையீடு இன்னும் விசாரிக்கப்படவில்லை.

author avatar
Muthu Kumar

Leave a Comment