#KXIPvsKKR: வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முன்னுக்கு செல்லுமா பஞ்சாப்…?

இன்று ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டி இன்று ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. புள்ளி பட்டியலில் கடைசியாக இருக்கும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெற்றி பெரும் நோக்குடன் பஞ்சாப் அணி  வீரர்கள் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த … Read more

சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்கள்.. ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு!

ஆர்ச்சரின் அபார பந்துவீச்சால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் 23 ஆம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி முதலில் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் தவான் களமிறங்கினார்கள். … Read more

ராஜஸ்தான் அணிக்காக 1,000 ரன்களை அடித்து கொடுப்பாரா பட்லர்..?

டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 24 ரன்கள் அடித்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 1,000 ஆகிவிடும்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இதுவரை 50 போட்டிகள் விளையாடி 1,503 ரன்கள் அடித்துள்ளார். இதில் 148 பவுண்டரிகள் மற்றும் 69 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் விளையாடி 117 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் … Read more

புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்ற SRH..!

 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.  ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 22 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 23 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த நிலையில் நேற்று 22 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. … Read more

#RRvDC: டாம் கரண் இல்லை.. டாஸ் வென்று பந்துவீச காத்திருக்கும் ராஜஸ்தான் அணி!

ஐபிஎல் தொடரில் 23 ஆம் போட்டியில் தொடங்கவுள்ள நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 23 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் டெல்லி அணியில் எந்த மாற்றங்களும் இல்லை என ஸ்ரேயாஸ் … Read more

ரோஹித் கூறும் கருத்துக்கள் நான் திறமையாக பேட்டிங் செய்ய காரணம் – சூரியகுமார் யாதவ்…!

ரோஹித் சர்மா கூறும் கருத்துக்கள் நான்  திறமையாக பேட்டிங் செய்ய காரணம் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் நடப்பாண்டு தொடரில் 6 போட்டிகள் விளையாடி 180 அடித்துள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மிகவும் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். அவர் அடித்த ரன்களே இந்த நிலையில் இதுகுறித்து சூரியகுமார் யாதவ் கூறுகையில், இப்போது இல்லை என்றால் … Read more

ஒரு சிக்ஸ் அடித்து 100 சிக்ஸர் அடித்தோர் பட்டியலில் இடம்பெறுவாரா தவான்?

இன்று நடைபெறவுள்ள ராஜஸ்தான் – டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சிக்ஸ் அடித்து 100 சிக்ஸர் அடித்தோர் பட்டியலில் டெல்லி அணியின் அதிரடி வீரர் தவான் இடம்பெறவுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 23 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ராஜஸ்தான் அணி 11 … Read more

CSK வீரர்களை கடுமையாக விமர்சித்த சேவாக்…!

சென்னை அணியின் வீரர்கள் , தங்கள் அணியை ஒரு அரசாங்க வேலையாகவும், சரியாக விளையாடவிட்டாலும், சம்பளம் கிடைக்கும் என்ற நோக்குடன் ஆடுவதாக சேவாக் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ள நிலையில், நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேதர் ஜாதவின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக ஜாதவ் … Read more

ஒரே நாளில் இரண்டு சாதனைகளை படைக்கவுள்ள ரிஷப் பண்ட்..!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இன்று இரண்டு சாதனைகளை படைக்கவுள்ளார்.  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இதுவரை 59 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 1907 அடித்துள்ளார். அதைபோல் 170 பவுண்டரிகளும் 99 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மட்டும் 5 போட்டிகள் விளையாடி 171 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் இன்று டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷார்ஜா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த … Read more

கேப்டனாக இந்த சாதனையை படைப்பாரா ஸ்மித்…!

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்று டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் 74 ரன்கள் குவித்தால் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1,000 ஆகிவிடும்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 86 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 2155 ரன்கள் அடித்துள்ளார். இதில் 193 பவுண்டரிகளும் 55 சிக்ஸர்களும் அடித்துள்ளார். மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் விளையாடி நிலையில், 133 ரன்கள் மட்டுமே … Read more