பிரதமர் மோடி கடவுள் போன்றவர் – பிரதமர் மோடிக்கு மாலையணிவிக்க முயன்ற சிறுவன்..!

அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி, பிரதமர் மோடிக்கு மாலையணிவிக்க முயன்ற சிறுவன். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக உப்பள்ளிக்கு வருகை புரிந்தார்.  அப்போது அவர் காரின் கதவை திறந்து வைத்து நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்தார். சாலையின் இருபுறத்திலும் நின்று பிரதமரை வரவேற்றனர். இருபுறமும் பாதுகாப்பு வளையம் வைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் நின்ற  சிறுவன் ஒருவன் திடீரென்று இரும்பு தடுப்பை தாண்டி பாதுகாப்பு வளையத்தை மீறி ஓடி வந்து பிரதமர் மோடிக்கு … Read more

3,184 சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3,184 சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. காவலர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் அத்துறையை சார்ந்த பணியாளர்கள் உட்பட 3,184 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் மு.கஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறையில் 3 ஆயிரம் பணியாளர்கள், தீயணைப்புத் துறையில் 118 அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கம் பெறுவோருக்கு மாதாந்திர பதக்கப்படி ரூ.400 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழக, தமிழ்நாடு பொங்கல்’ – ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகி விட்டது – தமிழிசை

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகிவிட்டது என தமிழிசை பேட்டி.  சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஆளுநர் தமிழிசை பொங்கல் கொண்டாடினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இன்று கொண்டாடப்படும் பொங்கல் தமிழக, தமிழ்நாடு பொங்கல் என தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் வரம்பு மீறி பேசக்கூடாது. தமிழ்நாடும் வேண்டும் தமிழகமும் வேண்டும். ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகிவிட்டது. முதல்வர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம் என கூறியும், தமிழக ஆளுநரை இணையதளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள். சிறிய கருத்து வேறுபாடு … Read more

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண புகார்கள் ஏதும் வரவில்லை – அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண புகார்கள் ஏதும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் பேட்டி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொங்கலுக்கு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல, 2வது நாளாக கூடுதலாக 1,855 … Read more

எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி..! களத்தில் சிந்திப்போம்…! – காயத்ரி ரகுராம்

நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் என காயத்ரி ரகுராம் அறிக்கை. காயத்ரி ரகுராம் அவர்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலின்படி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ‘என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை … Read more

பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட முக்கியப்புள்ளி..!

காயத்ரி ரகுராம் அவர்கள் பாஜகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்.  காயத்ரி ரகுராம் அவர்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலின்படி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி, 6 மாத காலம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த திருமதி.காயத்ரி ரகுராம் அவர்கள், தனது சுய விருப்பத்தின் பெயரில் கட்சியிலிருந்து விலகுவதாக சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அத்துடன் மாநில அமைப்பு … Read more

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  சென்னை தீவுத் திடலில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்தார். இந்த விழாவானது, நாளை முதல் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் என 18 இடங்களில் தமிழக பாரம்பரிய மயிலாட்டம், பறை, சிலம்பாட்டம், தெருக்கூத்து, கானா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இன்று தொடங்கிய இந்த கலை … Read more

புனேவின் பெயரை ‘ஜிஜாவ் நகர்’ என மாற்ற வேண்டும்.. என்சிபி அமோல் மிட்காரி கோரிக்கை..!

புனே நகரின் பெயரை ‘ஜிஜாவ் நகர்’ என மாற்ற வேண்டும் என என்சிபி எம்எல்சி அமோல் மிட்காரி கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜியின் தாயார் ஜிஜாபாய் போசலேயின் நினைவையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் புனே நகரின் பெயரை ‘ஜிஜாவ் நகர்’ என மாற்ற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் அமோல் மிட்காரி கோரிக்கை விடுத்துள்ளார். புனே நகருக்கு ஜிஜாவ் நகர் என்று பெயரிடுவது மகாராஷ்டிராவின் அனைத்து சிவபக்தர்களின் விருப்பமாகும். வரும் சட்டசபை … Read more

விரைவில் ஆவின் கூல்டிரிங்ஸ்.! பால்வளத்துறை அமைச்சர் தகவல்.!

ஆவின் மூலம் கூல்டிரிங்க்ஸ் தயாரிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. – பால்வள துறை அமைச்சர் நாசர் தகவல்.  தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஏற்கனவே ஆவின் மூலம் நெய் , ஸ்வீட்ஸ் தயாரிக்கப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து, வருவது கோடை காலம் என்பதால் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பணிகள் அதிகரிக்கப்படுத்த பட உள்ளன . அதே போல ஆவின் மூலம் கூல்டிரிங்க்ஸ் தயாரிப்பதற்கான நடவடிக்கையும் … Read more

#Breaking : ஆளுநருக்கு எதிரான போராட்டம்.! விசிக தலைவர் திருமாவளவன் கைது.!

ஆளுநர் ரவிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யபட்டுள்ளனர்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசுகையில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் பல்வேறு பகுதிகளை விட்டு பேசினார். மேலும், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே அவர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநரின் நடவடிக்கை எதிர்த்து, அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென … Read more