,
guava chutney

மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் கொய்யா சட்னி செய்யலாமா?

By

Guava chutney -நாவூறும் சுவையில் கொய்யா சட்னி செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்;

  • கொய்யா =2[அரை காய் பதத்தில் ]
  • பூண்டு= பத்து பள்ளு
  • சின்ன வெங்காயம் =15
  • புளி  =நெல்லிக்காய் சைஸ்
  • வர மிளகாய்= 4
  • கடலை பருப்பு= ஒரு ஸ்பூன்
  • சீரகம்= அரை ஸ்பூன்
  • கடுகு= அரை ஸ்பூன்
  • எண்ணெய்= நான்கு ஸ்பூன்
  • கருவேப்பிலை ,கொத்தமல்லி சிறிதளவு

guava (1)

செய்முறை;

ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பை சேர்த்து வறுக்கவும் .லேசாக பொரிந்ததும்  பூண்டு மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். இப்போது கருவேப்பிலை, வர மிளகாய், சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி புளியையும்  சேர்க்கவும். இப்போது கொய்யாவை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

koyya chutney

கொய்யா  சூடு ஏறினாலே போதும். அதிகம் வதக்க தேவையில்லை. இப்போது அதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கல் உப்பையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். இப்போது தாளிக்க இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு சிறிதளவு கருவேப்பிலை ஒரு வர மிளகாய் கிள்ளி போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து இறக்கினால் சுவையான மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் கொய்யா  சட்னி தயார்.

Dinasuvadu Media @2023