வயலில் தரையிறங்கிய ‘LULU’ ஹெலிகாப்டர்- விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு…!

தொழிலதிபர் யூசுப் அலி சென்ற ‘LULU’ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வயலில் தரையிறக்கப்பட்டது.விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான யூசுப் அலி, அவரது மனைவி மற்றும் மூன்று பேரை ஏற்றிச் சென்ற LULU ஹெலிகாப்டர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை அவசர அவசரமாக கொச்சின் பனங்காட்டில் உள்ள NH பைபாஸினருகில் சேறும்,சகதியுமாய் இருந்த இடத்தில் தரையிறக்கப்பட்டது.இதனால் ஹெலிகாப்டர் ஒரு சிறிய விபத்துக்குள்ளானது.இதனால் அதில் பயணம் செய்தவர்கள் சிறிய காயங்களுடன் முதலுதவிக்காக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகையில், லூலூ குழுமத்தின் தலைவரான திரு. யூசுப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர்,கொச்சு கடவந்திராவில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து, சிறிது தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை அழைப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர்.பனங்காட்டின் மீன்வளக் கல்லூரியின் மைதானத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென ஏற்பட்ட  தொழில்நுட்பகோளாறு  காரணமாக 200 மீ தொலைவிற்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலை அருகில் தரையிறக்கப்பட்டுள்ளது,என்று தெரிவித்தனர்.

மேலும்,விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

யூசுப் அலி சமீபத்தில் 4.8 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்ட இரண்டாவது ஐக்கிய அரபு எமிரேட் பணக்காரராக உருவெடுத்துள்ளார் என்றும், லுலு குரூப் இன்டர்நேஷனலின் 7.4 பில்லியன் டாலர் வருவாயை வளைகுடா மற்றும் பிற இடங்களில் சுமார் 200 நிறுவனங்களுடன் பங்கு வைத்திருக்கிறார் என்றும் ஃபோர்ப்ஸ் இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Recent Posts

தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…

17 mins ago

உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார்! யுவராஜ் சிங் பேச்சு!

Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…

30 mins ago

பிரதமர் பதற்றத்தில் இருப்பது பேச்சிலேயே தெரிகிறது… ராகுல் காந்தி விமர்சனம்!

Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…

47 mins ago

மீண்டும் அதே பிரச்சாரம்… கார்கே கோரிக்கையை ஏற்க மறுக்கும் பிரதமர் மோடி.?

Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும்…

58 mins ago

தளபதி 69 நான் எடுத்தா இவுங்க எல்லாரும் இருப்பாங்க! நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான்?

Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…

2 hours ago

இறுதிக்கட்டத்தில் 2ம் கட்டம்… டாப்பில் திரிபுரா… மற்ற மாநிலங்களில் நிலவரம் என்ன?

Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…

2 hours ago