#BREAKING: திமுக பட்டியல் – ரஃபேல் வாட்ச் பில்லை காட்டினார் அண்ணாமலை!

ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன் என்று அதற்கான பில்லை காண்பித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இன்று ரபேல் வாட்ச் பில் உடன் சேர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தாரின் சொத்து மதிப்புகள், முதலீடு விவரங்கள், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவரங்கள் ஆகியவை பட்டியல் போட்டு வெளியிடப்படும் என  அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார்.

DMK Files:

இதையடுத்து, DMKFiles என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக தொடர்பான முக்கிய கோப்புகள் இன்று 10.15 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

ரஃபேல் வாட்ச் பில்:

திமுகவின் ஊழல், சொத்து பட்டியலை வெளியிடுவதாக கூறிய நிலையில், அண்ணாமலை பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், தனது ரஃபேல் வாட்ச் பில்லை காண்பித்தார். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். எனது வங்கி கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்தும் விவரங்களையும் வெளியிடுகிறேன் என தெரிவித்தார். வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

ரஃபேல் வாட்ச் ரூ.3 லட்சம்:

இதன்பின், காவல் பணியில் இருந்தபோது, லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர் என குற்றசாட்டிய அண்ணாமலை, நண்பரிடம் ரஃபேல் வாட்ச்சை ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கியதாக அதற்கான பில்லை காண்பித்தார்.  கோவை ஜிம்சன் நிறுவனத்தில் ரஃபேல் வாட்ச்சை வாங்கி கேரளாவின் சேரலாதன் எனக்கு கொடுத்ததாகவும், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வாட்சை வாங்கிய சேரலாதன் ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார் எனவும் கூறியுள்ளார்.

RELATED ARTICLES