,

நிலவில் பாதுகாப்பாக உலாவரும் ரோவர்! குழந்தையை போல் கவனிக்கும் லேண்டர்!

By

Lander Imager

நிலவின் மேற்பரப்பில் சுழலும் லெண்டர் படம்பிடித்த பிரக்யான் ரோவரின் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, நிலவில் பாதுகாப்பாக உலா வரும் பிரக்யான் ரோவர், புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவில், பாதுகாப்பான பாதையை தேடி ரோவர் சுழற்றப்பட்டது. லேண்டர் இமேஜர் கேமரா மூலம் சுழற்சி படம்பிடிக்கப்பட்டது. இது நிலவில், ஒரு குழந்தை விளையாட்டுத்தனமாக, உல்லாசமாக இருப்பது போன்ற உணர்வை, தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வு என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், ரோவரில் உள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி, சல்பர் (எஸ்) இருப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “ரோவரில் உள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) கருவி, ரோவர் இருக்கும் இடத்தில் சல்பர் (எஸ்) மற்றும் பிற சிறிய கூறுகளைக் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது