#BREAKING: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.!!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது.  இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.  மாணவ, மாணவியர்கள் தங்கள் தேர்வு முடிவினை   tnresults.nic.in , dge.tn.nic.in , என்ற இணைய தளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

இணையத்தளத்தில் சென்று மாணவர்கள் அவர்களின் பிறந்த தேதி, பதிவெண்  ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறியலாம். மேலும், இந்த மதிப்பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரதான அரசு நூலகங்கள், மாணவர்கள் பயின்ற பள்ளிகள் ஆகிய இடங்களில் சென்றும்  தெரிந்துகொள்ளலாம்.

அந்தந்த மாணவ, மாணவியர்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் மதிப்பெண்கள் அனுப்பப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த தேர்வு முடிவினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.