எல்லையில் நடந்த மோதல்.. இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

லடாக் எல்லை பகுதியில் நேற்று இரவு நடந்த மோதல் குறித்து சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பும் பரஸ்பரம் நல்லுறவுடன் எல்லை பிரச்னையை அணுகலாம் என பேச்சுவார்த்தையில் கூறியதாக தகவல்கள் வெளியானது.