Categories: Uncategory

உங்களுக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கா? இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!!!


உங்களுக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கா? இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!!!

சில உணவுப் பொருட்களும் உடலில் வெப்பத்தை அதிகரித்துவிடும். இதனால் எப்போதும் மனதில் ஒருவித எரிச்சல், கவனக்குறைவு, தூக்கமின்மை, வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.
வெயில் காலம் ஆரம்பித்தாலே அனைவருக்கும் மனதில் ஒருவித பயமானது ஏற்படும். ஏனெனில் மற்ற காலங்களைத் தவிர, கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக வெயில் காலத்தில் காதாரணமாகவே உடல் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும். ஆகவே அப்போது சாப்பிடும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் சில உணவுப் பொருட்களும் உடலில் வெப்பத்தை அதிகரித்துவிடும். இதனால் எப்போதும் மனதில் ஒருவித எரிச்சல், கவனக்குறைவு, தூக்கமின்மை, வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். அதிலும்  அக்னி நட்சத்திர வெயில் அல்லது கத்திரி வெயிலின் போது வீசும் வெயிலின் தாக்கத்தை தாங்கவே முடியாது. எனவே இந்த மாதத்தில் உணவுகளில் கட்டுப்பாட்டுடனும், கவனமாகவும் இருந்தால், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கலாம்.

மேலும் கோடையில் நிறைய தண்ணீர் மற்றும் பழங்களை சாப்பிட்டு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உடல் வெப்பமானது அதிகம் இருக்கும். அத்தகையவர்கள் ஒருசில உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அத்தகையவர்களுக்காகவும், உடல் வெப்பம் அதிகமாகாமல் இருக்கவும், கோடையில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.

கார உணவுகள்

கார உணவுகளை கோடையில் மட்டும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.

சப்பாத்தி

கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

பால் பொருட்கள்

அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.

சிக்கன், நண்டு, இறால்

அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அத்தகையவர்கள் கோடையில் சிக்கன், நண்டு, இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சிலசமயங்களில் சூட்டை கிளப்பி வயிற்றுப் பிரச்சனையான வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும். எனவே இதனை தவிர்ப்பதே நலம்.

ஜங்க் உணவுகள்

பர்கர், பிட்சா, பிரெஞ்ச் ப்ரைஸ் போன்றவை செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுப்பதோடு, சில நேரங்களில் அவை ஃபுட் பாய்ஸனையும் ஏற்படுத்தும். மேலும் இத்தகைய உணவுகள் உடலுக்கு தீமையையே கொடுக்கக்கூடியது. இத்தகைய உணவுகளை அனைத்து காலங்களிலும் தவிர்ப்பதே உடலுக்கு சிறந்தது.

காபி

காபியும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே இதனை முடிந்த வரையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது.

வறுத்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும்.

உலர் பழங்கள்

உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான். அதே சமயம் அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிட வேண்டும்.

மாம்பழம்

கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழம் சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். இதுவும் அளவுக்கு அதிகமானால், அவை உடல் வெப்பத்தை கிளப்பிவிட்டு, பருக்களையும் உண்டாக்கும். எனவே இந்த பழத்தை அளவாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள், இதனை தவிர்ப்பதே நல்லது.

ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள்

குளிர்ச்சியாக இருக்கும் ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள் இரண்டுமே உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. இவற்றை சாப்பிட்டால், வாய்க்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்குமே தவிர, வயிற்றிற்கு அவை சென்றால், வெப்பத்தை தான் அதிகரிக்கும்.

Castro Murugan
Tags: health

Recent Posts

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

1 hour ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

4 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

5 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

6 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

6 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

6 hours ago