கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது காலாண்டில் ஜப்பான் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை படி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுகர்வு மற்றும் வர்த்தகம் குறைந்ததால் , ஜப்பானின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 27.8% ஆக குறைந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் வணிக மற்றும் நுகர்வோர் செலவினங்கள் குறைந்ததால் ஜப்பான் இரண்டாவது காலாண்டில் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. மே மாதத்தின் பாதியில் ஜப்பானில் ஊரடங்கு நீக்கப்பட்டது. ஆனாலும், நடப்பு காலாண்டில் பொருளாதாரம் மந்தமான நிலையாக இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி சாதகமாக மாறும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், உலகளவில், சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் பொருளாதார மந்தநிலையாக உள்ளது. சீனாவின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 3.2% வளர்ச்சியை கண்டுள்ளது. அதுவே ஜனவரி-மார்ச் மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் 6.8% சரிவைக் கண்டது.
கடந்த 1980 -ம் ஆண்டு 27.2% மிகப்பெரிய சரிவைக் கண்டது அதன் பின்னர், தற்போது தான்மிக பெரிய வீழ்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜப்பான் 17.8% வீழ்ச்சியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…