#வேளாண் மசோதா-பாரதம் முழுவதும் “பாரத் பந்த்”!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துள்ள நிலையில் செப்.,25ம் தேதி ‘பாரத் பந்த்’ நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவைகள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் 2 மசோதாக்கள் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதாவினை எதிர்த்து, மத்திய தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். மேலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை என்று நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்து உள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

பஞ்சாப்பில் உள்ள 10 விவசாய சங்கங்கள் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது.

இந்நிலையில் வரும் 25ம் தேதி பஞ்சாப் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய கிசான் சங்கார்ஸ் ஒருங்கிணைப்பு குழு நேற்று ஒரு  அறிக்கை வெளியிட்டது அதில் இந்த மசோதாக்களால், விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும். தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து அகற்றுவதாலும், தனியார் மண்டிகள் அமைக்கப்படுவதாலும் விவசாயிகளின் விலை பாதுகாப்பு முற்றிலும் பறிபோகும். எனவே, இந்த மசோதாவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து செப்.,25ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும்,’ என்று அறிவித்துள்ளது.

விவசாய மசோதா காரணமாக அரியானாவில் ஆட்சி செய்து வரும் பாஜக-ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணி கட்சிக்கு இடையே பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மசோதாக்களுக்கு ஜேஜபி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், இக்கட்சி சார்பில் துணை முதல்வராக உள்ள  துஷ்யந்த் சவுதாலா (ஜேஜேபி), முதல்வர் மனோகர் லால் கட்டாரை நேற்று சந்தித்து பேசினார். இதன் பின்னர், துஷ்யந்த்தின் சகோதரரும், ஜேஜேபி கட்சி தலைவருமான திக்விஜய் சிங் சவுதாலா கூறுகையி்ல், ‘‘எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது,என்று தெரிவித்தார்.

kavitha

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

6 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

12 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

13 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

14 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

15 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

15 hours ago