,

நிறைவேறியது பெனெல்லி ரசிகர்களின் ஆசை ! வந்துவிட்டது லியோன்சினோ 250..!

By

  • பெனெல்லி, தனது மற்றொரு படைப்பான லியோன்சினோ 250ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  • இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது.

பெனெல்லி ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான பெனெல்லியின் லியோன்சினோ 250. இந்த பைக்கை வெளிப்புறமாக பார்க்கும் போது, இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது.

Image result for லியோன்சினோ 500"

இந்த பைக்கின் ஆற்றலை பொருத்தவரை, பெனெல்லி லியோன்சினோ 250-கள் 249சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் லிக்யுட்-கூல்டு, இன்ஜின்களுடன் வருகிறது. ஓவர் ஹெட் கேம்ஸாப்ட்களுடன் ஒவ்வொரு சிளிண்டருகும் ஒன்று என 4 வால்வ், எலக்ட்ரிக் எரிபொருள் இன்ஜெக்ஷன்களுடன் 37 mm திரட்டல் பாடிகளுடன் இருக்கும். மேலும் இந்த மோட்டார்களின் அதிகபட்ச ஆற்றல் 25.4 bhp ஆற்றலில் 9,250 rpm-லும், பீக் டார்கான 21 Nm-ல் 8,000 rpm-லும் இருக்கும். இந்த இன்ஜினில் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

Image result for benelli leoncino 250 engine, gearbox"

உபகரணங்களை பொருத்தவரை, புதிய பெனெல்லி லியோன்சினோ 250-களில் முன்புறத்தில் 41 mm அப்சைடு டோவன் போர்க்கல் , ப்ரீ லோடு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஸன் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 17 இன்ச் அலாய் வீல்கள் இரண்டு புறத்திலும், சாட் 110/70-R17 டயர்கள் முன்புறத்திலும், 150/60-R17 அளவு கொண்ட டயர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

Image result for benelli leoncino 250 tyres and disc"

பிரேக்கை பொருத்தவரை, 280 mm ப்ளாட்டிங் டிஸ்க்களுடன் நான்கு பிஸ்டன் கிளிப்பர்கள் முன்புறத்திலும், 240 mm டிஸ்க்களுடன் சிங்கிள் பிஸ்டன் ப்ளாட்டிங் கிளிப்பர்கள் டூயல்-சேனல் ஏபிஎஸ்களுடன் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெனெல்லி லியோன்சினோ 250, சிட்டி மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Dinasuvadu Media @2023