,
Kerala Elephant Incident

கேரளாவில் யானை மிதித்து உயிரிழந்த பாகன் ..! நெஞ்சை உலுக்கும் வீடியோ!!

By

கேரளா : கேரளாவில் ஒரு சோகமான சம்பவத்தில், ஜூன் 20, வியாழன் அன்று ஒரு யானை மிதித்து பாகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுவது என்பது வழக்கம். எனவே, யானை சவாரிக்காக பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து கொண்டிருந்தார். அப்போது யானையை பாகன் கட்டளையிட்டு கொண்டு பிரம்பால் தாக்கினார்.

இதனால் ஆக்ரோஷம் கொண்ட அந்த யானை பாகனின் மீது ஏறி அவரை கொன்றது. இதனை கண்டு அதிர்ச்சியான, மற்றோருவர் பாகன் வேகமாக வந்து யானையை குச்சியை வைத்து தாக்கினார். இருப்பினும், பாகன் பாலகிருஷ்ணன் பரிதமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

குறிப்பு : இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஒரு சிலருக்கு வீடியோ பார்ப்பது சற்று சோகத்தை உண்டு செய்யலாம். எனவே, மனநிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சட்டவிரோத யானை சவாரி மையத்திற்கு எதிராக வனத்துறை வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ், சட்டவிரோத சவாரி மையங்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காது என்றும், வனத்துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி, இதுபோன்ற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

Dinasuvadu Media @2023