தர்ம சாஸ்தா சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு… பக்தர்கள் வர வேண்டாம் என தேவசம்போர்டு அறிவுறுத்தல்…

தர்ம சாஸ்தா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை திறக்கப்பட்டு  வரும் 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்றும்,  கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேபோல், சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படாது என்று ஏற்கனவே கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதேபோல் பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் வழங்கப்பட மாட்டாது. அப்பம், அரவணை கவுண்டர்கள் செயல்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை வெகுமளவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பீதிய்யால் கடவுளை வணங்க காண முடியாதது மிகவும் வருத்தம் அளிப்பதாக ஐயப்ப பக்தர்கள் கருதுகின்றனர்.

author avatar
Kaliraj