வரி செலுத்துவோர் கவனத்திற்கு… ஜூலை 31க்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் தான்.!

நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரியை கடைசி நாளான ஜூலை 31க்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரி செலுத்துவோர்கள் நடப்பு நிதியாண்டுக்கான 2023-24 தங்கள் வருமான வரி தாக்கலை காலக்கெடு தேதியான ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால், தாமதமாக செலுத்தும் அபராதத்தொகையுடன் டிசம்பர் 31க்குள் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.5000 அபாரதத்துடன் தங்களது வருமான வரியை செலுத்தலாம்.

ஆண்டு வருமானம் ரூ. 5,00,000 ஐ தாண்டவில்லையென்றால், அவர்கள் தாமதக்கட்டணம் ரூ.1000 மட்டும் செலுத்தி தங்கள் வருமானவரியை செலுத்திக்கொள்ளலாம். மேலும் வருமான வரியில் ஏதேனும் நிலுவைத்தொகை இருந்தால் அவர்களுக்கு, கூடுதலாக வட்டியுடன் வருமானவரி வசூலிக்கப்படும் என வருமானவரித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Muthu Kumar