ரெய்டு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்..!

ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக்  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடந்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று சோதனை நடந்த ஷாஜஹான் ஷேக் இல்லத்தை  நெருங்கியபோது அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதமேந்திய துணை ராணுவப் படையினரை சுற்றி வளைத்தனர்.  அதிகாரிகளை ஷேக்கின் ஆதரவாளர்கள் தாக்கியதால் சோதனை நடத்த முடியவில்லை.  இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைந்துள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை..!

கொரோனா காலத்தில், மாநிலத்தில் ரேஷன் விநியோகத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த ஆண்டு, ரேஷன் விநியோகத்தில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஜோதிபிரியோ மல்லிக்கை ஊழல் தடுப்பு அமைப்பு கைது செய்தது. இதையடுத்து மல்லிக்கின் கூட்டாளிகளிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.  மேலும் அவரது தனிப்பட்ட உதவியாளர் அமித் தே மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் அபிஜித் தாஸ் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.