#BREAKING: தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு ஜூன் 11-ஆம் தேதி வரை சிறை..!

தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டன. தடகள விளையாட்டு வீராங்கனைகளிடம் பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக பேசி வந்ததாக சமூகவலைதளத்தில் புகார்கள் வந்தன.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக தன்னை பாலியல் தொந்தரவு செய்ததுடன், தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று19 வயது இளம்பெண் ஒருவர் நாகராஜன் மீது சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், காவல்துறை தன்னை கைது செய்ய வருவார்கள் என்று பயந்து நாகராஜன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.  பின் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக நாகராஜன்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று சிகிச்சை முடிந்த நிலையில் காவல்துறை நாகராஜனை கைது செய்து நேற்று இரவு முழுவதும் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு விருகம்பாக்கத்தில் உள்ள நீதிபதி வீட்டில் நாகராஜன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

murugan

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

3 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

3 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

3 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

3 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

4 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

4 hours ago