அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் கொட்டிய கனடா

காலாவதியான 1.36 கோடி அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை வெளியேற்றியுள்ளது கனடா.

தடுப்பூசிக்கான வரம்பற்ற தேவை மற்றும் வாங்கும் நாடுகளின் விநியோகம் அதில் உள்ள குளறுபாடுகள், மேலும் அதனை எடுத்துக்கொள்வதில் உள்ள சவால்கள் காரணமாக, அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடா அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து 2 கோடி மருந்துகளை வாங்கியது.
பின்னர் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து வாங்கிய ஒரு கோடிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்கள் கலவாதியாகின இதனால் இவற்றை வாங்கிய அனைத்தையும் குப்பையில் கொட்டும் நிலைக்கு வந்துள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment