அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் சலுகை வழங்க முடியாது…! – சிறப்பு நீதிமன்றம்

அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அழிக்கவோ, சலுகை அளிக்கவோ முடியாது.

கடந்த 2011 – 2015-இல் அதிமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை தருவதாக கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் பெறுவதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் ஆவதற்கு  விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிக்கை நகலை பெற்று கொண்டார்.  குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் குற்றபத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டனர்.

மேலும், சிறப்பு நீதிமன்றம் மற்ற இரண்டு வழக்குகளிலும் இன்று ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜி இன்று ஆஜராகவில்லை. செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருப்பதால், மின்துறை சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டங்கள் இருப்பதாலும் அவரால் ஆஜராக முடியவில்லை என்று மற்றொரு தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அழிக்கவோ, சலுகை அளிக்கவோ முடியாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Recent Posts

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

29 mins ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

2 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

9 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

15 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

15 hours ago