தல பாடலுக்கு தாளம் போடும் அறந்தாங்கி நிஷா மகள்.!

தலயின் கண்ணான கண்ணே பாடலை அம்மா பாட குழந்தை தாளம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில்

By ragi | Published: May 31, 2020 01:18 PM

தலயின் கண்ணான கண்ணே பாடலை அம்மா பாட குழந்தை தாளம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது . குறிப்பாக இந்த படத்திலுள்ள கண்ணான கண்ணே பாடல் அனைவரதும் பேவரட் பாடலில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவரது பேச்சு திறமையால் அனைவரையும் கைவசம் போட்டு கொண்டார். சமீபத்தில் தனுஷின் நடிப்பில் வெளியான மாரி2 படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்து, அதற்கு சஃபா என்று பெயரிடப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அறந்தாங்கி நிஷா தனது குழந்தைக்கு கண்ணான கண்ணே பாடலை பாடி கொடுக்கும் போது, அதற்கு ஏற்றவாறு குழந்தை தனது கால், கைகளை ஆட்டி தாளம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

En padalukku en magal safa Thalam. Kandipa avalukku unga blessing venum.

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

Step2: Place in ads Display sections

unicc