அனுஷ்காவின் நிசப்தம் படம் OTT platform-ல் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் விளக்கம்.!

நிலைமை நீண்ட காலத்திற்கு சாதகமாக இல்லாவிட்டால், அப்போது நாங்கள் படத்தை ஓடிடியில் வெறியிடுவோம் என்றும கூறிஉள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னரும் திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.அதில் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பட படங்களை OTT platform-ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதற்கட்டமாக நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன் மகள் வந்தாள் படத்தையும், கீர்த்தி சுரேஷின் பெங்குயின் படத்தையும் அமேசான் பிரேமில் ரிலீஸ் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதனையடுத்து அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் என்ற படத்தையும் அமேசான் பிரேம் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கியதாகவும், ஓடிடியில் வெளியிடவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தது .  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்ள் மீடியா ஃபாக்ட்றி தயாரிக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது.

இந்த படம் ஓடிடியில் ஐந்து மொழிகளிலும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டிருந்தது .இந்த நிலையில் இதுகுறித்து நிசப்தம் படத்தின் தயாரிப்பாளரான கோனா வெங்கட் கூறுகையில், நிசப்தம் படத்தின் வெளியீடு குறித்து பல தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன. நாங்கள் முதலில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதிலையே அதிகம் முன்னுரிமை கொடுப்பதாகவும், நிலைமை நீண்ட காலத்திற்கு சாதகமாக இல்லாவிட்டால், அப்போது நாங்கள் படத்தை ஓடிடியில் வெறியிடுவோம் என்றும், நல்லது நடக்கும் என்று நம்புவோம் என்று கூறியுள்ளார்.