புஷ்பா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

புஷ்பா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துவருகிறார். தேவ ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி புஷ்பா படத்தில் முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் 5 பாடகர்கள் பாடியுள்ள பாடல் வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.