அண்ணாத்த ஓப்பனிங் பாடல் தான் ரஜினி சினிமா வாழ்க்கையில் சிறந்த பாடல்..!!

அண்ணாத்த ஓப்பனிங் பாடல் தான் ரஜினி சினிமா வாழ்க்கையில் சிறந்த பாடல் என்று படத்தில் பணியாற்றிய ஒருவர் வீடியோ கால் மூலம்  தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத்திற்கு சென்றார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது நடிகர் ரஜினிகாந்த் திரும்பினார். இந்த நிலையில் படத்தில் பணியாற்றிய ஒருவர் வீடியோ கால் மூலம் அண்ணாத்த படத்தை பற்றி கேட்டதற்கு அண்ணாத்த படத்தின் ஓப்பனிங் பாடல் ரஜினியின் சினிமா வாழ்க்கையில்  மிக சிறந்த ஓப்பனிங் பாடல் என்று தெரிவித்துள்ளர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.