“ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது”- துணை அதிபர் மைக் பென்ஸ்!

ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என அந்நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகம். இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு இருதரப்பு தேர்தல் பிரச்சாரங்களும் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், பால்டிமோரில் குடியரசு கட்சி நிர்வாகிகள் இடையே அமெரிக்க நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் பேசினார்.

அப்பொழுது அவர், சட்டம் மற்றும் நீதியை நிலைநிறுத்தும் துறைகளுக்கான நிதியை குறைக்க போவதாக ஜோ பைடன் கடந்த சில தினங்களுக்கு முன் கூறியதை சுட்டிக்காட்டிய மைக் பென்ஸ், ஒருவேளை அவ்வாறு நடந்தால், அமெரிக்காவில் வன்முறை தலைதூக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி, ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என விமர்சித்துள்ளார்.