தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புயல் ஒடிசா அருகே 1000 கிமீ நிலைகொண்டுள்ளது என தகவல்…

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஒடிசா அருகே 1000கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில்  உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது  தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.

   இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஒடிசா அருகே 1000கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது என  சென்னை வானிலை மைய இயக்குனர் கே.பாலசந்திரன் தற்போது தெரிவித்துள்ளார். இந்த புயலுக்கு ஆம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 18,19-ம் தேதிகளில் கரையைக் கடகாகுடும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

author avatar
Kaliraj