Job TANGENCO

இன்ஜினீயர்களே ..10ம் தேதி ரெடியா இருங்க ..! தமிழக மின் பகிர்மான கழகத்தில் அசத்தல் வேலை ..!

By

TANDGEDCO : தமிழக மின்சார வாரியத்தில் தற்போது இன்ஜினீயரிங் படித்த பட்டதாரிகளுக்கு அசத்தலான வேலைவாய்ப்பை தற்போது மின்சார வாரியத்தின் துணை நிறுவனமான தமிழ்நாடு மின் பகிர்மான அதாவது TANGEDCO 500 காலியிடப்பணிகளை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான முழு விவரங்களையும் தற்போது பார்க்கலாம்.

காலியிட விவரங்கள் :

பட்டம் பணியிடங்கள்
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE ) 395
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் (ECE ) 22
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் (EIE) 9
கம்ப்யூட்டர் இன்ஜினீரிங் (CSE) / இன்ஃபமெர்ஷன் டெக்னலாஜி (IT) 9
சிவில் இன்ஜினியரிங் 15
மெக்கானிக்கல் இன்ஜினீரிங் 50

 

கல்வி தகுதி :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங் / டிப்ளமோ / டெக்னலாஜி மற்றும் தொடர்புடைய பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் அனைவரும் 2020 முதல் 2023 படித்த பேட்ச்சில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

சம்பள விவரங்கள் :

இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 1 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.8000 /- வழிப்படும்.  அந்த ஒரு வருடத்தில் பயிற்சிபணி வழங்கப்படும். அதில் சிறந்து விளங்கும் ஆர்வமும் தகுதியுடையவர்கள் வேலையில் தீர்மானிக்க படுவார்கள் மேலும், அப்போது அவர்களுக்கு சம்பள உயர்வுடன் பணியமர்த்தப்படுவார்கள்.

குறிப்பு :- தேர்வு முறையை பொறுத்த வரை மெரிட் லிஸ்ட் அடிப்படையிலும் சான்றிதழ் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 10-07-2024
விண்ணப்பிக்க கடைசி நாள் 31-07-2024

மேலும், இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை 08-08-2024 அன்று வெளியிடப்படும். மேலும், 28-08-2024 முதல் 31-08-2024 வரை சான்றிதழ் சரிபார்க்கும் முறை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை (ஆன்லைன்):

  • இந்த அப்பரண்ட்டீஸ் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிபதற்கு அதிகாரப்போர்வை இணையதளமான https://nats.education.gov.in/ என்ற இணையதளம் சென்று அதில் ஸ்டூண்ட் செக்ஷனில் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ஏற்கனவே லாக்இன் இருந்தால் அதை சரியாக கொடுத்து உள்நுழைய வேண்டும்.
  • ஒரு வேலை லாக்இன் இல்லை என்றால் ஸ்டூடன்ட் லாக்இன் கொடுக்க வேண்டும்.
  • பின் அதில் கேட்கப்படும் ஆவணங்களை சரியாக அளித்து புதிதாய் ஒரு லாக்இன் உருவாக்கி கொள்ள வேண்டும்.
  • அங்கு TANGEDCO என செர்ச் (search) செய்ய வேண்டும்.
  • அதில் இந்த வேலைக்கான விண்ணப்பபடிவத்தை தேர்ந்தெடுத்து  சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Dinasuvadu Media @2023