ஐயோ…இதன் விலையும் எகிறி விட்டதே…அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள்.!!

தமிழகத்தில் தொடர்ந்து  மீன்கள் விலையும் அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அசைவ பிரியர்கள் சிக்கன் வாங்காமல் மட்டன், மீன்களை வாங்கி சமைத்து சாப்பிடுவதில்  கவனம் செலுத்துகின்றனர்.

இதில் ஏற்கனவே , மட்டன் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது மீன்கள் விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கன்னியாகுமரியில் இன்று மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன்படி, நேற்று வஞ்சிரம் மீன்  கிலோ வுக்கு 700 ரூபாய் இருந்த நிலையில், இன்று கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதால் அசைவ பிரியர்கள் சாக்கில் உள்ளனர். மேலும் வருகின்ற ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் என்பதால், இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை உயர்வாகவே காணப்படும் என மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.