AK 62 இசையமைப்பாளர்..வில்லன்..ஒளிப்பதிவாளர்..யார்.? மொத்த அப்டேட் இதோ.!

அஜித் தற்போது துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக AK62 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை விக்னேஷ் சிவன் இயங்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

AK62 MOVIE NEW UPDATE
AK62 MOVIE NEW UPDATE Image Source Google

பிறகு சில காரணங்களால் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ak62 ajith
ak62 ajith Image Source Google

இந்த நிலையில், தற்போது புதிதாக கிடைத்த தகவல் என்னவென்றால், AK62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்ட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றவுள்ளாராம்.

arun vijay and ajith
arun vijay and ajith Image Source Google

அது மட்டுமின்றி, இந்த AK62 திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக பிரபல நடிகரான அருண் விஜய் நடிக்கவுள்ளதாகவும் சூடான ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவல்கள் உறுதியானால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment