Monday, June 3, 2024

ஸ்டாலினை மீண்டும் முதல்வாராக்குவோம் – திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிர்ந்த அதிமுகவினர்!

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் பேசியதாவது, விலைவாசி உயர்வால் பாதிப்படையும் மக்கள் திமுகவுக்கு தெரியாமல் வாக்களித்துவிட்டோம் என கூறுகின்றனர்.

தற்போது, இந்த விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மகளிருக்கான அணைத்து சலுகைகளையும் முடக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.  அந்தவகையில், மீண்டும் இப்போது தேர்தல் நடந்தால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவோம் என்று கூற மேடையில் சலசலப்பு ஏற்படவும்.

பின்னர், அருகில் உள்ளவர்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி சொல்றதுக்கு பதிலா ஸ்டாலினு சொல்லிட்டிங்கனு சொல்ல…. உடனே பதறி போன சீனிவாசன், அய்யய்யோ, வார்த்தை தவறாக வந்துவிட்டது, ஒரு வேகத்துடன் பேசும்பொழுது வார்த்தையில் பிழை ஏற்பட்டது என இன்று அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பேசினார்.

RELATED ARTICLES