, ,

முதுகெலும்பை வலுப்படுத்த இந்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்..!

By

முதுகு எலும்பை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ இந்த உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது.

   
   

நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் நமக்கு உதவியாக இருப்பது முதுகு எழும்பு, முதுகு தண்டுவடம். அதனால் முதுகு எலும்பை வலுப்படுத்துவது அவசியமான ஒன்று. இன்று பலரும் உடல் உழைப்பு அதிகமாக செய்வதை விட, கணினியில் வேலை செய்வது தான் அதிகமாக இருக்கிறது. அதனால் ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலைபார்ப்பதால் முதுகு பெருமளவு பாதிக்கப்படும். இந்த பாதிப்பை தடுக்க நாம் அடிக்கடி முதுகுக்கு சில உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேசமயம் முதுகு எலும்பை வலுப்படுத்த அதற்கேற்ற உணவுகளை எடுத்து கொள்வது சிறப்பு. அதனால் இந்த பதிவில் முதுகு எலும்பு ஆரோக்கியமாக இருக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பச்சை காய்கறிகள்: பச்சை காய்கறிகள் உடலுக்கு மிகவும் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. உடலில் உள்ள மூட்டுகளுக்கு பச்சை காய்கறிகளில் உள்ள சத்துக்கள் இன்றியமையாத பலன் கொடுக்கும். முடிந்த அளவு தினமும் ஒரு கீரை வகையை சமைத்து சாப்பிடுவது நன்மை அளிக்கும். பச்சை இலை காய்கறிகளான முள்ளங்கி, முட்டைகோஸ், ப்ரோக்கோலி, காளிஃபிளார், முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் எடுத்து கொள்ளுங்கள். இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் முதுகு எலும்புக்கு வலு கிடைக்கும்.

ஆரஞ்சு காய்கறிகள்: காய்கறிகள் என்றாலே பல வண்ணங்களில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன் நிறம் வாயிலாக பல்வேறு நன்மைகள் இருக்கிறது. அந்த வகையில் ஆரஞ்சு நிற காய்கறிகள் உடலில் உள்ள எலும்புகளுக்கு நன்மை அளிக்கும். பரங்கிக்காய், கேரட், சக்கரவல்லி கிழங்கு போன்ற ஆரஞ்சு நிற காய்கறிகளை எலும்புகளின் ஆற்றலை அதிகரிக்க பயன்படுத்தலாம்.

பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் எலும்புகளுக்கு அதிக அளவு வலு அளிக்க கூடியவை. அதனால் பருப்பு வகைகளான பாதாம், பிஸ்தா, நிலக்கடலை போன்றவற்றை தினமும் சிறிது எடுத்து கொள்ளுங்கள். பருப்பு வகைகளில் பாதாமில் வைட்டமின் ஈ, கால்சியம்  இருக்கிறது. கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. இதனை எடுத்து கொள்வதனால் உங்களது எலும்பு நல்ல வலுவாக இருக்கும்.

கடல் உணவு: கடல் உணவு வகைகளில் மீன்களில் சத்து அதிகம் உள்ளது. அதிலும் சால்மன் வகை மீன்கள் மிகவும் அதிக நன்மை நிறைந்தது. இதில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு உடலுக்கும் எலும்புகளுக்கும் வலு அளிக்கும். இவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதற்கு பயன்படுகிறது. அதனால் முதுகு எலும்பு தண்டுவடத்திற்கு ஆரோக்கியம் அளித்து வலுவாக்கும்.

Dinasuvadu Media @2023